முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடந்த 9ம் தேதி மூச்சுத்திணறல்  காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெட்லியின் உடல் நிலை, தற்போது மேலும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லியின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாகவும், அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐசியூவில், மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அருண் ஜெட்லி இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பின், தற்போது வரை அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி