சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி

ராய்ப்பூர்:

த்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங் மாரடைப்பு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் தலைமையில் பாஜக அங்கு மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.  நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் ராமன்சிங் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அவரது உதவியாளர் தெரிவித்து உள்ளார்.