ஜெயலலிதா மரண விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா உடல்நிலைக்குறைவு காரணமாக கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்ததை அடுத்து அவரது மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதல்வர்  பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அதன்படி இந்த ஆணையம் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அப்போலோ மருத்துவர்கள் என நூற்றுக்கும் அதிகமானோரிடம் விசாரணை செய்தது. இதற்கிடயே விசாரணை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைந்தால், இதுவரை மூன்று முறை கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் விசாரணை நடத்தி ரும் நீதிபதி ஆறுமுகசாமி உடல்நல குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை அன்று சென்னையல் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.