டெல்லி: மோடி அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், தனது  பத்ம விபூசன் விருதை முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் திருப்பி வழங்கியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களால், விவசாயிகளின் வாழ்வாதாரம், அவர்களது நிலம் உள்பட அனைத்து உரிமைகளும் கார்ப்பரேட்களால் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்றும் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லியிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இன்று போராட்டம் 8வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்தியஅரசு 2வது கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், பாஜகவின் நீண்ட கால கூட்டணி கட்சியான பஞ்சாபின் அகாலிதளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தனககு ட பத்ம விபூசன் விருதை திருப்பி வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

பாஜகவின் நம்பிக்க்குரிய கட்சிகளில் அகாலிதளம் கட்சியும் ஒன்று.  எம்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்தவரும், தற்போதைய அரசியல் களத்தில் உள்ள அரசியல்வாதிகளில் ஒருவரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான  பிரகாஷ்சிங் பாதல், விவசாயிகளுடன்  தனது ஒற்றுமையைக் காட்ட தனது பத்ம விபூஷனை திருப்பி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளார்.

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசில், சிரோமணி அகாலிதளம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. மக்களவையில் இரண்டு இடங்களைக்கொண்ட சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அந்தக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக இருந்து வருகிறார்., மற்றொரு உறுப்பினரான அவரின் மனைவி ஹர்சிம்ரத் கௌர் பாதல், மோடி அரசில் உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராக இருந்துவந்தார். இந்தநிலையில்தான் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்சிம்ரத் கௌர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை  ஏற்கனவே ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.