மத்தியப் பிரதேசம் – 27 லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்த காங்கிரஸ் அரசு!

போபால்: மத்தியப் பிரதேசத்தில் தனது 15 மாத ஆட்சிக்காலத்தில், கிட்டத்தட்ட 27 லட்சம் விவசாயிகளினுடைய கடன்களைத் தள்ளுபடி செய்தது கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு தெரிவித்துள்ளது தற்போது அம்மாநிலத்தை ஆளும் பாரதீய ஜனதா அரசு.

ஜெய்வர்தன் சிங் மற்றும் பால பச்சான் என்ற 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அம்மாநில வேளாண் அமைச்சர் கமல் படேல், இத்தகவலை தெரிவித்தார்.

மொத்தம் 2695381 விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு விவசாயின் கடன் மதிப்பும் ரூ.1 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், தள்ளுபடி செய்யப்பட்ட கடனின் மொத்த மதிப்பு ரூ.11000 கோடிகள் என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்த விஷயத்தில் முறைகேடு நடந்திருப்பதாக, எதிர்க்கட்சியாக இருந்த பாரதீய ஜனதா குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், தற்போது ஒரு முக்கிய விஷயத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.