கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக முன்னாள் அமைச்சர் ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்வானார்

--

பெங்களூரு:

ர்நாடக சட்டமன்றத்தில் இன்று முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் தேர்வு நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  முன்னாள் சுகாதரத்துறை அமைச்சர் ரமேஷ்குமார், சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எந்தவித எதிர்ப்புமின்றி ஒருமனதாக அவர்  தேர்வு செய்யப்பட்டார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகருக்கு எடியூரப்பா வாழ்த்து அருகில் முதல்வர் குமாரசாமி

பரபரப்பான கர்நாடக அரசியல் சூழ்நிலையில் இன்று  கர்நாடக சட்டப்பேரவை கூடியது..  இந்த சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரமேஷ்குமார் எவ்வித எதிர்ப்புமின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகருக்கு முதல்வர் குமாரசாமி, துணைமுதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து துணைசபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. அதன் பிறகே முதல்வர் குமாரசாமி கொண்டு வரும்  நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது  வாக்கெடுப்பு நடைபெறும்.