சென்னை:

மிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசரை, இன்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி எனது நீண்ட கால நண்பர்… இரண்டு அரசியல் தலைவர்களும் சந்தித்தால் அரசியல் பேசாமலா இருப்போம். பேசத்தான் செய்தோம் என்று கூறினார்.

இதற்கிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும்,  திருநாவுக்கரசரை சந்திக்க வந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக பேசி வருகின்றன. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து திருநாவுக்கரசரை அதிரடியாக நீக்கி, கே.எஸ்.அழகிரியை தலைவராக நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள திருநாவுக்கரசரின்  நடிகர் ரஜினிகாந்தி திடீரென விஜயம் செய்தார்.  தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க ரஜினி வந்ததாக கூறப்பட்டது.

அதே  திருமாவளவனும் திருநாவுக்கரசர் வீட்டுக்கு  வந்ததால் மூன்று பேரும் சந்தித்துக்கொண்ட னர். இது செய்தியாளர்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே ரஜினி கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு புருவங்களை உயர்த்த வைத்தது.

ஆனால், செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், ரஜினிகாந்த் எனது நெருங்கிய நண்பர். ரஜினிகாந்துக்கும் எனக்கும் 40 ஆண்டுகள் பழக்கம். ரஜினிகாந்தின் மகளின் திருமணம் நடைபெறவுள்ளது. எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவர் அழைப்பிதழ் தந்தார் என்றார்.

செய்தியாளர்கள் ரஜினியுடனான சந்திப்பின்போது அரசியல் பேசினீர்களா என்ற கேள்விக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதால், அரசியல் சூழல்கள், நாட்டின் நிலவரம் போன்ற பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் அமெரிக்கா சென்றபோது, அங்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார் என்று கூறினார்.

அமெரிக்காவில் ரஜினியுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானதே என்ற கேள்விக்கு,  அப்போது அவரை சந்திக்கவில்லை என்று மறுத்த திருநாவுக்கரசர்,  அவர் ஒரு மாநிலத்தில் இருந்திருப்பார்,  நாங்கள் அங்கு சந்தித்துக்கொள்ளவில்லை. சந்தித்தால், சந்தித்தேன் எனக்கூறப்போகிறேன் என்றவர்,.  நாங்கள் 40 வருட நண்பர்கள் என்பதால், அடிக்கடி சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறோம். அவரை அமெரிக்காவில் சென்றுதான் சந்திக்க வேண்டுமென்பதில்லை என்று தெளிவுபடுத்தினார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சித் தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் அவர் மக்களால் மதிக்கப்படும் ஒரு தலைவர் தான். ஜெயலலிதா காலத்தில் இருந்தே ரஜினிகாந்த் அரசியல் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்.  சினிமாவிலும் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார். எனவே அவர் கட்சி தொடங்காமல் இருந்தாலும், அவரும் ஒரு அரசியல் தலைவர் தான்.

இரண்டு அரசியல் தலைவர்களும் சந்தித்தால் அரசியல் பேசாமலா இருப்போம். பேசத்தான் செய்தோம். மற்றபடி, அவர் கட்சி ஆரம்பிப்பாரா? எப்போது ஆரம்பிப்பார் ? என்பதெல்லாம் அவர் தான் முடிவு செய்வார். ஆனால், என்னை எல்லாம் ரஜினி அழைக்கமாட்டார். ஏனென்றால் நான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் விசுவாசி. அவர் பிரதமர் ஆக வேண்டும் எனப் பாடுபடுவேன். எனவே காங்கிரஸில் தான் இருப்பேன்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.