முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ: கின்னசில் இடம் பிடித்த மேற்குவங்க 1 ரூபாய் டாக்டர்…

கொல்கத்தா:
57 ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த   1 ரூபாய் டாக்டர் சுஷோவன் பானர்ஜி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் போல்பூரை சேர்ந்த என்ற டாக்டர் சுஷோவன் பானர்ஜி. இவரது மருத்துவப் பணிக்காக பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். சுமார் 57 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வரும் இவர் 20லட்சத்தக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
சிகிச்சைக்காக இவர் வாங்கும் கட்டணம் ரூ.1 மட்டுமே. இதனால், மக்களிடையே ஒரு ரூபாய் டாக்டர் என்று புகழ் பெற்றார். ஏழை நோயாளிகள், அவரை வாழும் கடவுளாக பார்த்து வருகின்றனர்.
தனது வாழ்நாளில் அதிகமான நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்ததற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.