காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமான் காலமானார்!

சென்னை: 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமான் உடல்நலமின்றி இயற்கை எய்தினார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்தவர் வள்ளல் பெருமான். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினராவார்.   1984, 1989, 1991ல் சிதம்பரம் மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அதுபோல, கடந்த  2001-ம் ஆண்டு காட்டுமன்னார்கோவில்  சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் பதவி வகித்தார்.

இவர் வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சமீபத்தில் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 69.

இவர் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.