சென்னை:

திமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை பொறுப்பு வகித்தவரும், இந்நாள் அதிமுக நிர்வாகியுமான  ஜெனிபர்சந்திரன்  காலமானார். உடல்நலமின்றி மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றியவர் ஜெனிபர் சந்திரன். தி.மு.க., மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, அ.தி.மு.க., ஆட்சியின் போது  அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார். அவருக்கு அ.தி.மு.க., மாநில மீனவர் அணியின் இணைச் செயலர் பதவி வழங்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியும் சமீபத்தில் ஜெனிபர் சந்திரனுக்கு வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசியல் நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருந்த ஜெனிபர் சந்திரன், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.