திமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன்

சென்னை:

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்க்கட்சியில் இணைந்து வருகின்றனர்.

திமுக முன்னாள் அமைச்சரான  முல்லைவேந்தன் மற்றும், திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனும் இன்று  திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

அண்ணா அறிவாலயம் வந்த முல்லை வேந்தன்

கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்த நிலையிலி, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக முல்லைவேந்தன் நீக்கி வைக்கப்பட்டார். அதுபோல கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக கருப்பசாமி பாண்டியனும் நீக்கி வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு, திமுகவிலிருந்து திமுக மாவட்ட செயலாளர் தங்கம் சுப்பிரமணி மூலம் முல்லைவேந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று முல்லைவேந்தன் திமுகவில் இணைய முடிவெடுத்து சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து  வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

அதுபோல,  திமுகவிலிருந்து நீக்கி வைக்கப்பட்ட நெல்லை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர்  கருப்பசாமி பாண்டியனும் ஸ்டாலின் முன்னிலையில்  மீண்டும் கட்சியில் இணைந்தார்.