முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

சென்னை:

திமுக முன்னாள் அமைச்சரும்,  தற்போது டிடிவி ஆதரவாளராக  இருப்பவருமான  பரிதி இளம்வழுதி காலமானார், உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்து திமுகவில் அசைக்க முடியாத தளபதியாக இருந்து வந்தவர் பரிதி இளம்வழதி. தி.மு.க.ஸ்டாலினின்  படைத் தளபதிகளில் ஒருவராக சென்னையை வல்ம் வந்தவர் எழும்பூர் தொகுதியில் அசைக்க முடியாத வேட்பாளராகவும் இவர் இருந்தார்.

ஆனால், 2011ம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளரிடம் பரிதி தேல்விஅடைந்ததால், திமுகவில் ஓரம்கட்டப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த அவர் திடீரென ஜெயலலிதா முன்னிலையில் கடந்த 2013ம் ஆண்டு அதிமுகவில்  இணைந்தார்.

அதிமுகவில் அவருக்கு செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதிமுகவில் சேர்ந்த பரிதி தொடர்ந்து அதிமுகவிற்காக செயல்பட்டு வந்த பரிதி இளம்வழுதி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்ட போது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறினார்.

ஆனால் அங்கும் நீடித்திருக்காமல் டிடிவி.தினகரன் அணி தனியாக பிரிந்த போது டிடிவி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு இப்படி மாறி மாறி ஆதரவு தெரிவித்தாலும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணி இணைந்த பின்னர் பரிதி இளம்வழுதியின் அரசியல் அமைதியாகவே இருந்தது.

இந்நிலையில் இன்று அதிரடியாக பரிதியை கட்சியில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தனர். இதன் காரணமாக சமீப காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார்.

இந்த நிலையில் உடல்நலமில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பரிதி இளம்வழுதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.