சாவிலும் இணைபிரியாத முன்னாள் புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் ‘சிங்கநெஞ்சம் சம்பந்தம்’ தம்பதி

ந்திய புவியியல் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனரும், அறிவியல் ஆசானுமான ‘சிங்கநெஞ்சம் சம்பந்தம்’ காலமானார். அவரது மரணத்திற்கு சற்று முன்பே அவரது மனைவியும் மாரடைப்பால் காலமானார்.

மரணத்திலும் இணைபிரியாத இந்த தம்பதிகளின் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிங்கநெஞ்சம் சம்பந்தம் தம்பதி

அறிவியல் ஆய்வாளரும், சமூக ஆர்வலருமான ‘சிங்கநெஞ்சம் சம்பந்தம்’  முகநூல் இணைய தளம் மூலம்  பல விஷயங்களை அறிவியல் ஆதாரத்துடன் விளக்கி வருபவர். இவரை ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில்,  அவர் இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன், அவர் மனைவி தன் கணவர் தன்னை விட்டு பிரியப்போகிறார் என அறிந்தாரோ, என்னவோ, அவரும் திடீர்  மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இவர்களின் மரணத்துக்கு முகநூல் அன்பர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மரணத்திலும் இணைப் பிரியாத இந்த ஆன்மாக்கள் என்றும் பிரியாமல் அதே அன்போடு நிலைத்திருக்க பிரார்த்திக்கிறார்கள்.