சென்னை,
மிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்ல தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா சென்னை அப்போலோ மருத்துவமனை வந்தார்.
raoisah1
கடந்த மாதம் 22ந்தேதி இரவு முதல் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து முன்னாள் ஆளுநர் ரோசய்யா விசாரித்தார்.
நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்த அவர் கூறியதாவது:-
உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வரின் நலம் குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். மருத்து வர்களின் சிகிச்சைக்கு முதல்வர் ஜெயலலிதா நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறிது நாளில் பூரண குணமடைவார் என நம்புகிறேன், அவர் நலமுடன் இருக்க நான் மட்டும் அல்ல, ஆயிரக்கணக்கான மக்களும் நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்கின்றனர்.
முதல்வருக்கு கடவுள் பூரண குணமளிப்பார் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
கேரளா மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, 
ramesh
அப்போலோ மருத்துவமனைக்கு வந்த கேரள எதிர்க்கட்சித்தலை வரும்  மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்.
மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டியிடமும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினேன்,
முதல்வர் குணமடைந்து வருகிறார். ஒட்டுமொத்த கேரள மக்களின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்றார் ரமேஷ் சென்னிதாலா.