கொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…

அகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேலின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, கேசுபாய் பட்டேலுக்கும்  கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது.   ஆன்டிஜென் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டாக்டர்கள் அறிவுரையின் பேரில் காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் கேசுபாய் பட்டேல் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கடந்த மாதம் (செப்டம்பர் மாதம் 19ந்தேதி தெரிவித்தனர். பின்னர் அவர் குணமடைந்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்,  வயதுமுதிர்வு காரணமாக அவர் உடல்நலம் தேறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில், அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.