தேச துரோக வழக்கில் கேட்டலோனியா முன்னாள் தலைவர் கைது

பெர்லின்:

கேட்டலோனியாவை தனி நாடாக அறிவித்த முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் தன்னாட்சி பெற்ற மாகாணமாக கேட்டலோனியா உள்ளது. இந்நிலையில் கேட்டலோனியாவை தனி நாடாக அறிவித்துவிட்டு நடவடிக்கைக்கு பயந்து கார்லஸ் பூஜ்டிமோன் தப்பிச் சென்றார்.

தேசத் துரோகம், கலகம் செய்ததாக ஸ்பெயின் அரசால் தேடப்பட்டு வந்த பூஜ்டிமோன்ட், அவரது அரசியல் வாரிசு ஜோர்டி டுருல் உள்பட 13 பேருக்கு எதிராக விசாரணை நடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கார்லஸ் பூஜ்டிமோன் இன்று ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.