முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தை மறைவு…!

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தை காலமானார்.

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தையும், முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரியுமான என்.எல் வெங்கடேசன் உடல்நலக் குறைவால் காலமானார். மறைந்த வெங்கடேசன் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராணியின் கணவர் ஆவார்.

வெங்கடேசனின் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் வழையடி பகுதியாகும். அண்மையில் தான் பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அதிகாரி மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்ததக்கது