மறைந்த முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி கே.சுகுணாவின் இறுதிசடங்கு நடந்தது!

மதுரை,

சென்னை ஐகோர்ட்டின்  முன்னாள் நீதிபதி சுகுணா  மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

சென்னை ஐகோர்ட்டின்  முன்னாள் நீதிபதி கே.சுகுணா மாரடைப்பு காரணமாக மரணத் அடைந்ததை தொடர்ந்து அவரது  இறுதிச்சடங்குகள் நேற்று திருமங்கலத்தில்  நடந்தன.

சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு  மதுரை கிளையில் நீதிபதியாக பணியாற்றியவர் கே.சுகுணா (65). இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம், வரிச்சியூர் அருகே உள்ள பனங்குடி.

சென்னை சட்டக்கல்லூரியில் சட்ட படித்த அவர் திருமணமாகாதவர்.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், திருமங்கலத்தில் உள்ள சோனைமீனாள் நகரில் வசித்து வந்தார். ‘

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அதையடுத்து நேற்று மாலை இறுதிச்சடங்குகள் நடந்தன. இதில் ஏராளமான நீதிபதிகள், வக்கீல்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சுகுணா நீதிபதியாக இருந்தபோது, சாலைபணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் உத்தரவு மற்றும் குரூப்-2 பணி ஆணை தொடர்பான வழக்குகளில் அதிரடி உத்தரவு பிறப்பித்தவர் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.