விஹெச்பி சர்வதேச தலைவராக வி.எஸ். கோக்ஜே தேர்வு

குர்கான்:

விஹெச்பி சர்வதேச தலைவராக பிரவின் தொகாடியா இருந்து வந்தார். இந்த பதவியில் புதிய நபரை நியமிக்க கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக தேர்தல் நடந்தது. குர்கான் நகரில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 192 உயர்மட்ட பிரதிநிதிகள் வாக்களித்தனர்.

இதில், இமாச்சலப் பிரதேசம் மாநில முன்னாள் கவர்னர் வி.எஸ். கோக்ஜே 131 வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராகவா ரெட்டி 60 வாக்கு பெற்றார். இதன்மூலம் விஹெச்பி அமைப்பின் சர்வதேச தலைவராக கோக்ஜே தேர்வு செய்யப்பட்டார்.