இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹபீப் கான் காலமானார்…

ஐதராபாத்: ஆந்திர மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீப் கான் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83.

முகமது ஹபீப் கான் 6.7 அடி உயரம்  உள்ளவர். இவர்  1950, 60ம்ஆண்டுகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இருந்துள்ளார். அவரது உயரம் காரணமாக அவர் வீசும் பந்து, எதிரணி வீரர்களுக்கு  உதறலை ஏற்படுத்தி வந்தது.

இந்திய தீவுகள், இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடி உள்ளார்.

முன்னாள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், பிரசாத்  உள்பட பலருக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார். வயது முதிர்வு காரணமாக உடல்நலப் பிரச்சினையில் வீட்டில் ஓய்வுவெடுத்து வந்தவர், உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

முகமது ஹபீப் கான் உயிரிழந்த செய்தி அந்தகால கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.