காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சிறப்பு அதிகாரி நியமனம்!! ராஜ்நாத் சிங்

டில்லி:

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

‘‘காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு சார்பில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக’’ உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராஜ்நாத்சிங் கூறுகையில், ‘‘காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உளவுத் துறையின் முன்னாள் இயக்குநர் தினேஷ்வர் சர்மா இதற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

1979-வது பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சர்மா, 2014-&16ம் ஆண்டு வரை உளவுத்துறை இயக்குனராகப் பணியாற்றியவர். காஷ்மீர் தலைவர்கள் யார்? யாரிடம்? பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்’’ என்றார்.

You may have missed