Random image

சூதாட்டம் போல் பாலியல் தொழிலுக்கும் சட்ட அனுமதி….உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

ஐதராபாத்:

சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கி வரி விதித்து அதன் மூலம் அரசு வருவாய் ஈட்டலாம் என சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் சூதாட்டத்தைப் போல் பாலியல் தொழிலையும் சட்டபூர்வமாக்க வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில்,‘‘ சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க பரிந்துரை செய்தது நல்ல விஷயம். சட்டவிரோதமாக சூதாட்டம் ஆங்காங்கே நடந்து வருகிறது. அதனால் அதை சட்டபூர்வமாக்கும்போது 75 சதவீத சட்டவிரோத சூதாட்டங்கள் தடுக்கப்படும்.

சில தீய பழக்கங்களை சட்டத்தால் கட்டுப்படுத்த நினைத்தால் அது சட்டவிரோதமாக நடப்பது பெருகும். மதுவிலக்கு வி‌ஷயத்தில் அதை நாம் பார்த்துள்ளோம். பாலியல் தொழில் எல்லா இடத்திலும் நடக்கிறது. அதை சட்டபூர்வமாக்கி உரிமம் கொடுத்தால் பாலியல் தொழில் கட்டுப்பாட்டுக்குள் வரும்’’ என்றார்.