கர்நாடகாவில் பாஜக தலைவர் படுகொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

பெங்களூரு: கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா பாஜக தலைவரும், தார்வாட் மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான யோகேஷ் கவுடா 2016ம் ஆண்டு, ஜூன் 15ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் போலீசார் 7 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதன் பின்னர், வழக்கில் தொடர்புடையதாக 6 பேர் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் யோகேஷ் கவுடா கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பிறகு கடந்த 5ம் தேதி கைது செய்தது. இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் குல்கர்னியை காணொளி மூலம் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரும் 23ம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டனர்.