கோலாலம்பூர்:
லேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என  கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மலேசியாவின் பிரதமராக நஜிப் ரசாக் கடந்த  2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். அப்போது,  அரசு நிதியை தனது சொந்த கணக்கிற்கு மாற்றி ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு  கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவர்மீது 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊழல்  காரணமாக,  ஊழல், நம்பிக்கை மோசடி, சட்டவிரோத பண பரிவர்த்தனை, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற வந்தது.
இதில்,  7 குற்றச்சாட்டுகளிலும் நஜிப் ரசாக் குற்றவாளி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டில் நஜிப் ரசாக் குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.