18ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘தாய்’ கழகத்தில் இணைந்தார் செந்தில் பாலாஜி! (படங்கள், வீடியோ)

சென்னை:

முன்னாள் அதிமுக அமைச்சரும், டிடிவி தினகரனின்  அமமுக கட்சியில் மாநிலஅமைப்பு செயலாளராக இருந்து வந்தவருமான செந்தில் பாலாஜி, சமீப காலமாக டிடிவி  மீது மனஸ்தாபத்தில் இருந்து வந்த நிலையில், இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

செந்தில்பாலாஜி தொடக்கத்தில் திமுக ஆதரவாளராகவும், திமுக உறுப்பினராகவும் இருந்து வந்த நிலையில், பின்னர் ஜெயலலிதா  மீது ஏற்பட்ட ஈர்ப்பால் அதிமுகவில் ஐக்கியமானார். தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்   ‘தாய்’ கழகமான திமுகவில் தன்னை இணைந்துக்கொண்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து தனது ஆதரவாளர்க ளுடன்  இன்று  இணைந்தார். இதன் காரணமாக அவர் குறித்து  கடந்த சில நாட்களாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்பபுள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்ட செந்தில் பாலாஜிக்கு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டைய  வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன், டி.ஆர். பாலு, நேரு, ராஜா உள்பட பலர்  உடன் இருந்தனர்.

செந்தில் பாலாஜி இன்று திமுகவில் இணைய இருந்ததை முன்னிட்டு, இன்று காலை முதலே அவரது ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவிந்து வந்தனர். ஏராளமான வாகனங்களில் அவரது  தொகுதியான கரூரில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் வந்த வாகனங்களில்,   திமுக தலைவர் ஸ்டாலின் படத்துடன் செந்தில் பாலாஜியின் படம் இருப்பது போன்ற போஸ்டர்கள்  ஒட்டப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை 12 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி இணைந்தார்.

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்திருப்பது அமமுக கட்சியினரிடையே சலசலப்பை உருவாக்கி உள்ளது. மேலும் பலர் டிடிவி அணியில் இருந்து வேறு கட்சிக்கு தாவலாம் என நம்பப்படுகிறது.. இது தமிழக அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ மறைவை தொடர்ந்து, செந்தில் பாலாஜி டிடிவியுடன் நெருக்கமானார். அதன் காரணமாக அவருக்கு அமமுகவில் பதவி வழங்கப்பபட்டது. இந்த நிலையில், எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டதால், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர்.

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த வீடியோ

கார்ட்டூன் கேலரி