டெல்லி: பாரதிய ஜனதாவை தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்  நிலையில் பாஜகவை தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக வேட்பாளர்கள் சட்டசபை  தேர்தலில் மொத்தமுள்ள 381 இடங்களில் 319 இடங்களில் வெற்றி பெற்றார்கள் என்றார்.

அதனை தொடர்ந்து மேலும் அவர் டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டு உள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஆனால் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தல் அல்லது இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் 163 இடங்களில் மட்டுமே வெற்றியடைந்தார்கள். ஒரே ஆண்டில் 319 என்பது 163 ஆக குறைந்தது.

பாரதிய ஜனதா கட்சியைத் தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? பா ஜ கட்சியைத் தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்பவேண்டும். இதனை பீகார் சட்ட மன்றத் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம் என்று பதிவிட்டுள்ளார்.