ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார் முன்னாள் அமைச்சர் ஹண்டே!

சென்னை,

முன்னாள் அமைச்சரும், டாக்டருமான எச்.வி.ஹண்டே இன்று அப்பலோ வந்து முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

a

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் எச்.வி.ஹண்டே.  1984ம் ஆண்டு இதேபோல் எம்.ஜி.ஆர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புருக்ளின் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வரை கூடவே இருந்து கவனித்தவர் டாக்டர் ஹண்டே.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிய அப்பல்லோ வந்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் உடல்நிலை குறித்து துனை சபாநாயகர் தம்பிதுரையிடம் கேட்டறிந்தேன். இன்றைக்கு மனநிறை வடைந்தேன். புரட்சி தலைவி அம்மா நல்ல குணமடைந்து வருகிறார்கள்.

புரட்சித்தலைவருக்கு பெராலிஸ் வந்தபோது பயிற்சி நிறைந்த மருத்துவர்களான சௌத்கொரிய மருத்துவகள் சிகிச்சை அளித்து நடக்க முடியாது என நினைத்தவர்களுக்கு மத்தியில் வந்தார்.

hande

தற்போது சிங்கப்பூர் இரண்டு பெண் மருத்துவர்கள் பிசியோதெரப்பி சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

முழு உடல்நலத்தோடு விரைவில் ஒருவாரத்திலோ அல்லது பத்து நாட்களிலோ வீடு திரும்புவார்கள் என்றார்.

அவரது பேட்டியிலிருந்து முதல்வருக்கு பெராலிஸ் நோய் தாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.