ஆள்மாறாட்டம் செய்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி அமைச்சர் பதவியிழந்த கல்யாணசுந்தரம்: அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ப்பு

புதுச்சேரி: ஆள்மாறாட்டம் செய்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி அமைச்சர் பதவியிழந்த புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் பாஜகவில் இணைந்தார்.

புதுச்சேரிக்கு உள்பட்ட காரைக்காலில், பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா பங்கேற்றார். முன்னதாக நட்சத்திர விடுதியில் பாஜக மாநில மைய குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், என்‌.ஆர்‌.காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் மற்றும் கல்யாணசுந்தரம், திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட பலர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

அவர்களில் கல்யாணசுந்தரம், புதுச்சேரியில் முன்னாள் அமைச்சராக இருந்தவர். 10ம் வகுப்பில் தேர்வின் போது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி அதனால் பின்னர் அமைச்சர் பதவியை இழந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.