மயக்கமருந்து கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: முன்னாள் வில்லன் நடிகர் மகன் கைது!

சென்னை:

ல்லூரி மாணவிக்கு குளிர்பாலத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, முன்னாள் வில்லன் நடிகரின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் பாக்யராஜ், சுலக்சனா நடித்த தூரல் நின்னு போச்சு படம் மூலம் பிரபலமானவர் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் சூர்யபிரகாஷ். பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது அதிமுகவில் பேச்சாளராக வலம் வருகிறார். இவரது மகன் விஜய் ஹரிஷ். இவரும் ‘நாங்களும் நல்லவங்கதான்’ ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும்,  வண்ணாரப்பேட்டேயைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் இருந்தாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஹரிஷ், அங்கு  குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர் மயக்கம் அடைந்ததும், பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் வன்புணர்வு செய்ததை வீடியோ எடுத்து அந்த பெண்ணை அடிக்கடி மிரட்டி உறவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி  வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுருகுறித்து விசாரணை நடத்திய  போலீசார் நடிகர் விஜய் ஹரிஷை கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு சிறையில் அடைத்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.