சென்னை:

முன்னாள் எம்பி.யும், அதிமுக செய்தி தொடர்பாளருமான கே.சி. பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் கொள்கை, குறிக்கோளுக்கும் முரண்பாடாக செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாள் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கட்சி உறுப்பினர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்திருக்க கூடாது எனறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது தொடர்பாக இன்று காலை பழனிச்சாமி சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்தன.