புதுடெல்லி: என்டிடிவி நிறுவனத்தில் மூத்த ஊடகவியலாளராக பணியாற்றிய நிதி ரஸ்தான், ஹாவர்டு பல்கலைக்கழத்தில் தனக்கு பேராசிரியர் பணி வழங்கப்படுவதாய் கூறப்பட்டு, தான் ஏமாற்றப்பட்டதாக சமூக வலைதளத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அதாவது, புகழ்பெற்ற ஃபிஷிங் தாக்குதலுக்கு தானும் ஆளானதாய் அவர் கூறியுள்ளார்.

ஹாவர்டு பல்கலைக்கழகத்தில், உதவிப் பேராசிரியராக தான் பணியமர்த்தப்பட உள்ளதாக கடந்தாண்டு ஜூன் மாதம் இவருக்கு தகவல் வந்தது. அதன்படி, அவருக்கான புதிய வாய்ப்பு, கடந்தாண்டின் செப்டம்பர் மாதம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தேவையற்ற தாமதங்கள் ஏற்பட்டன.

இதுதொடர்பாக, அவருக்கு சந்தேகங்கள் எழுந்தாலும், கொரோனா பரவல் காரணமாக கூறப்பட்டதால், அவர் இதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், மேலும் பல குழப்பமான சம்பவங்கள் ஏற்படவே, ஹார்வர்டு பல்கலைக்கழத்தின் மூத்த நிர்வாகிகளை இதுசம்பந்தமாக அவர் தொடர்புகொண்டார்.

அப்போதுதான், அவருக்கு வேலைவாய்ப்பு பற்றி வந்த தகவல் போலியானது என்று தெரியவந்துள்ளது. ஃபிஷிங்(phishing) தாக்குதல் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அவர் உணர்ந்தார். இதன்பொருட்டு, அவர் தனது வேலையை ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.