ஜெர்ஸி:

முன்னாள் நைஜீரிய சர்வாதிகாரி சானி அபாச்சாவின் ஜெர்ஸி வங்கி கணக்கிலிருந்து 267 மில்லியன் டாலர் பணம் மீட்கப்பட்டுள்ளது.


1993-1998-ம் ஆண்டு இறக்கும் வரை நைஜீரியாவில் ஆட்சியில் இருந்தவர் சர்வாதிகாரி சானி அபாச்சா.
இவரது வங்கிக் கணக்கு கடந்த 2014-ம் ஆண்டு முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

சர்வதேச அளவில் நிதி மோசடி மற்றும் பண மோசடி மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கிடைத்துள்ளதாக ஜெர்ஸி அட்டார்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இந்த பணம் முழுவதும் ஊழல் மூலம் சம்பாதித்தது என்று கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பின், மீட்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கணக்கிலும் எவ்வளவு பணம் உள்ளது என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மக்கள் பணத்திலிருந்து அபாச்சா கொள்ளையடித்த 300 மில்லியன் டாலர் பணத்தை கடந்த ஆண்டுதான் சுவிஸ் அதிகாரிகள் நைஜீரிய அரசிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், அடுத்த 6 ஆண்டுகளுக்கு நைஜீரிய மக்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.