பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதிக்கு கொரோனா பாதிப்பு

லாகூர் :

கொரோனா வைரஸ் தன்னை தாக்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிதி தெரிவித்துள்ளார்.

“வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; என் உடல் மோசமாக வலித்தது. நான் சோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக நான் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டிருக்கிறன். விரைவாக குணமடைய பிரார்த்தனை தேவை ” என்று 40 வயதான அப்ரிதி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

1996 ம் ஆண்டு கிரிக்கெட் உலகில் அறிமுகமான ஆல்-ரவுண்டரான இவர் 500 க்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடைசியாக 2016 ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற உலகக்கோப்பை 20-20 போட்டியில் அப்ரிதி கலந்துகொண்டார்.