பாகிஸ்தானுக்கு மகளுடன் வந்த நவாஸ் ஷெரிப் கைது
இஸ்லாமாபாத்:
லண்டனில் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ‘அவென்பீல்டு’ வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அந்த கோர்ட்டு முடிவு செய்தது.
நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறை தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை 6.15 மணியளவில் அபுதாபியில் இருந்து நவாஸ் ஷெரிப் பாகிஸ்தான் புறப்பட்டார். இரவு 9.15 மணியளவில் நவாஸ் ஷெரிப் வந்த விமானம் லாகூர் விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தில் இருந்து இறங்கி வந்த நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.