அமெரிக்காவில் மலையில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் உயிரிழப்பு

நியூயார்க்:
மெரிக்காவில் மலையில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் உட்டா மாகாணம் ஆல்பைன் நகரில் பாக்ஸ் எல்டர் என்ற மிகப்பெரிய மலை உள்ளது. இந்த மலை 11 ஆயிரத்து 100 அடி உயரம் கொண்டதாகும். நேற்று முன்தினம் மாலை இந்த மலைக்கு அருகில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாக்ஸ் எல்டர் மலையின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மலையில் இருந்து 4 பேரின் உடல்களையும் மீட்டனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டப்பட்டுள்ளது.