ராஜ்யசபா எம்.பி.யாக பதவி ஏற்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

ஜெய்ப்பூர்:

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத் தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று அவர் எம்.பி.யாக பதவி ஏற்றார். அவருக்கு ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 13ந்தேதி மாநில முதல்வர், துணை முதல்வர் உடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழும் வழங்கப்பப்பட்டது.

இந்த நிலையில், இன்று ராஜ்யசபா உறுப்பினராக மன்மோகன் சிங் பதவி ஏற்றார். அவருக்கு பாராளுமன்ற ராஜ்யசபா தலைவரும், துணைஜனாதிபதியுமான வெங்கையாநாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அகில  இந்திய காங்கிரஸ் இடைக்ககாலத் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மனைவி மற்றும் ராஜஸ்மாநில முதல் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாப்நபி ஆசாத் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். அவர்  கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார். அவரது பதவிக் காலம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது ராஜஸ்தானில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி