டெல்லி: உடல்நலப் பாதிப்பு காரணமாக காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பிரணாப் முகர்ஜி உடலுக்கு,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்   உள்பட காங்கிரஸ் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த பிரணாப் முகர்ஜியின் உடல் மருத்துவ மனையிலிருந்து இன்று காலை  அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதுபோல, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.