டில்லி:

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணரான, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 87வது பிறந்தநாள் இன்று. இதை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி, டிவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்..

அவரது பதிவில், டாக்டர் மன்மோகன் சிங் ஜி அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்.  அவரது நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.