பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் ஷெரீப் மகள் போட்டி

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25ம் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது, இதில் 2 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் போட்டியிடுகிறார்.

லாகூர் மற்றும் பஞ்சாப் தொகுதிகளில் அவர் போட்டியிட மரியம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் நெருக்கடி காரணமாக நவாஸ் ஷெரீப் தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அவரது மகள் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.