முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி…

டெல்லி:  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்திஉள்ளார்.

நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான  பிரணாப் முகர்ஜிக்கும்  கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒரு தனி நடைமுறை சம்பந்தமாக  மருத்துவமனைக்கு வருகை தந்தபோது,  நான் இன்று COVID19 க்கு நேர்மறை சோதனை செய்தேன். அதில் தனக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக  கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட நபர்களை, தயவுசெய்து தனிமைப்படுத்தவும், COVID-19 க்கு சோதனை செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். # சிட்டிசன்முகர்ஜி என்று தெரிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி