பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியேறினார் பொன். ராதாகிருஷ்ணன்: மேலிட உத்தரவால் அறையையும் காலி செய்தார்

சென்னை:  தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் 10 ஆண்டுகளாக தங்கி வந்த பொன்.ராதாகிருஷ்ணன் வெளியேற்றப்பட்டார்.

பாஜக தலைவராக பொன் ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற போது அவருக்கு கமலாலயத்தில் தங்க முதல் மாடியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  அவருக்கு பிறகு தமிழிசை சவுந்திர ராஜன் தலைவரானார்.

அப்பவும் பொன் ராதாகிருஷ்ணன் அந்த அறையை காலி செய்யாமல், அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், அவர் திடீரென அந்த அறையை காலி செய்திருக்கிறார்.

கடந்த 15ம் தேதி அறையை காலி செய்யுமாறு மேலிடம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பொன் ராதாகிருஷ்ணன் அங்கிருந்து வெளியேறினார். அதன் பிறகு கமலாலயத்துக்கும் வருவதில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலிடத்தின் உத்தரவால் பொன் ராதா கிருஷ்ணன் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.