பிரணாப் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

டெல்லி: டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்  முகர்ஜி), கடந்த 10ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  மூளையில் ரத்தம் உறைந்திருப்பதும், கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.

மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவை சரி செய்ய, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். பல்வேறு நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.

செயற்கை சுவாசம் கொண்டு சிகிக்சை தரப்பட்டு வருகிறது. அவருடைய  உடல்நிலை குறித்து டெல்லி ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

2 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை  கவலைக்கிடமாக உள்ளது. ரத்த ஓட்டம் சீராக உள்ள நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.