Random image

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்க்கு 10 ஆண்டு சிறை

இஸ்லாமாபாத்:

பனாமா லீக்ஸ் விவகாரத்தில் பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரீப் வழக்கின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீ செய்துள்ளார். இந்நிலையில் ஊழல் பணத்தில் லண்டனில் அவன்பீல்டு என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக அவர் மீது புகார் எழுந்தது.

இந்த வழக்கு தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது வந்தது. இதில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸூக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். நவாஸ் ஷெரீப், மர்யம் நவாஸ் ஆகிய இருவரும் தற்போது லண்டனில் உள்ளனர்.