ராஜீவ் காந்தி 75வது பிறந்த நாள்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை

டில்லி:

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி,  பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்.

ராஜீவ் சமாதியில் முன்னாள் குடியரசு தலைவர் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த தினம் இன்று  நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமது 40 வயதிலேயே இந்தியாவின் பிரதமராகவும், உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் ராஜீவ் காந்தி ஒருவர்.

ராஜீவ் சமாதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மரியாதை

இன்று அவரது பிறந்த நாளையொட்டி, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல்,  பூபேந்தர் சிங் ஹுடா உள்பட ஏராளமானோர் மரியாதைசெலுத்தினர்.

ராஜீவ் சமாதியில் சோனியா காந்தி மரியாதை
ராஜீவ் சமாதியில் ராகுல் காந்தி மரியாதை
ராஜீவ் சமாதியில் பிரியங்கா காந்தி அவரது கணவர் மரியாதை