முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 93வது பிறந்தநாள்: மோடி வாழ்த்து

டில்லி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தா நாளையொட்டி, அவருக்கு  பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

”பிரதமர் பதவிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்த காங்கிரஸ் அல்லாத முதல் தலைவர் வாஜ்பாயி. லக்னோ மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை அறிமுகப்படுத்தினார்” என்றார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் மணி திரிபாதி கூறி உள்ளார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 92-வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்,  வாஜ்பாய் நலமுடன வாழ பிரார்த்திக்கிறேன் என்றும்,  வாஜ்பாயின் தொலைநோக்கு எண்ணத்தால் உலக அரங்கில் இந்தியாவுக்கு கவுரவத்தை ஏற்படுத்தியது என்று  மோடி தெரிவித்துள்ளார்.

வாஜ்பாயின்  93-வது பிறந்தநாளை முன்னிட்டு  93 கைதிகளை விடுதலை செய்வதாக உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.