காஷ்மீர் நட்சத்திர ஓட்டலை, காங்கிரஸ் தலைவர் வீடு என ‘போலி’ செய்தி பதிவிட்ட முன்னாள் ‘ரா’ ஏஜண்ட்! காங்கிரசார் கொந்தளிப்பு

டில்லி:

காஷ்மீரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலை, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்  வீடு என போலியாக டிவிட்டரில் பதிவிட்ட முன்னாள்  ‘ரா’ ஏஜண்ட் என். கே.சூட் செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மக்களின் நிலை குறிந்து அறிய காஷ்மீர்  செல்ல முயன்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ‘ஓட்டல் விவந்தா தல் வியூ’ நட்சத்திர ஓட்டலை, இது, வேலையில்லாத குலாம்நபி ஆசாத்தின் வீடு என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தை மரியாதை குறைவாக முன்னாள் ரா ஏஜண்ட் என். கே.சூட் டிவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

காஷ்மீரில் உள்ள பிரபல ஓட்டல்:

முன்னாள் ரா ஏஜண்ட் என். கே.சூட்டின்  இந்த செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. தவறான தகவலை பதிவிட்டு, மூத்த தலைவர் ஒருவர்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்திய ரா ஏஜண்டுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் ரா ஏஜண்டான என்.கே.சூட்,  ஏற்கனவே என் பிரதமர் மோடி என புத்தகம் எழுதியவர். தீவிர பாஜக ஆதரவாளரான சூட், தற்போது குலாம்நபி ஆசாத்மீது பொய்யான தகவலை பதிவிட்டுள்ளது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்.கே.சூட் பதிவிட்டுள்ள டிவிட் பதிவு

 

 

கார்ட்டூன் கேலரி