பிரதமர் அலுவலக நடவடிக்கைகள் நாட்டை முடக்கிவிட்டன! ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

லண்டன்: இந்திய பிரதமரின் மையமாக்கும் முடிவு என்பது நாட்டில் ஒரு முடக்குதலை உருவாக்கி இருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான அவர் தற்போது அமெரிக்காவில் உள்ளார். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக இருக்கிறார். லண்டன் நகரத்தில், முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் ரகுராம் ராம் பேசியதாவது: காந்தி மற்றும் நேரு ஆகியோர் இந்தியாவை பற்றி கொண்டிருந்த பார்வை என்பது துடிப்பானதாக இருந்தது என்றார். அதே நேரத்தில் சிங்கப்பூர் தலைவர் லீ குவான் யூ, இந்தியாவை பற்றி கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார்.

இந்தியாவை சர்வாதிகரமாக மாற்றுவது சிறந்ததா? ஜனநாயகத்துக்கு திரும்ப முடியுமா என்பது ஒரு கனவு என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஆசிய கண்டத்தில் உள்ள பல நாடுகள், சர்வாதிகாரத்தை ஒப்புக் கொண்டு, அதன்படியே நடந்து கொண்டன.

அதனால் ஒரு கட்டத்தில் பலன் அடைந்த பின்னர், தமது பாதையை ஜன நாயகத்தை நோக்கி திருப்பிவிட்டன. இந்திய நாடு, ஒரு நடுத்தரமான வருமான நிலையை நோக்கி நெருங்கி வருகிறது. அதை அடைய மேலும் சில ஆண்டுகள் ஆகும்.

இந்தியாவில் சிறப்பான பல்கலைக்கழகங்கள் உள்ளன. குறிப்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை கூறலாம். அங்கிருந்து தான், அபிஜித் பானர்ஜி என்ற நோபல் பரிசு பெற்றவர் கிடைத்தார்.

மோடியின் கீழுள்ள பிரதமர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் ஒரு முடக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கருத்து வேறுபாடுகளை அடக்குவது என்பது கொள்கை வகுப்பவர்களை துடிப்புடன் செயல்பட வைத்திருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார நிலை, கவலையளிப்பதாக இருக்கிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையும் கவலை கொள்ள வைக்கிறது. வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் சொத்துகள் நிலைகுலைந்துள்ளன. பொருளா தார அமைப்பை சீர்திருத்த வேண்டும்.

2016ம் ஆண்டு மோடி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பெரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்திவிட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பையும் எதிர்த்தோம் என்பதை விட, அறிவுப்பூர்வமான திட்டமிடல் இல்லை என்று கூறலாம் என்றார்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: former reserve bank governor, prime minister office, raghuram rajan about modi, raghuram rajan in London, raghuram rajan pmo, பிரதமர் அலுவலகம், முன்னாள் ஆர்பிஐ கவர்னர், மோடி பற்றி ரகுராம் ராஜன், ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகம், லண்டன் ரகுராம் ராஜன்
-=-