சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சஞ்சமன் மரணம்…!

காங்டாக்: சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ மரணமடைந்தார். அவருக்கு வயது 73.

சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சஞ்சமன் லிம்பூ. 73 வயது நிரம்பிய அவர், நீண்ட நாள்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர்  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான காங்டாக்கில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மறைந்த சஞ்சமன் லிம்பூவிற்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.