முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவு: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை:

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமான நிலையில், அவரது உடலுக்கு திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக சட்டமன்ற முன்னாள் சபாநாயகரும்,  மூத்த வழக்கறிஞருமான பி.எச் பாண்டியன்  உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பி.எச்.பாண்டியன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலின்  நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் க.பொன்முடி, எம்.எல்.ஏ., தயாநிதிமாறன், எம்.பி., சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., கழக சட்டத்துறை தலைவர் மூத்த வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.