சுப்ரமணியன் சுவாமி அழைப்பை ஏற்று ராஜபக்ஷே டில்லி வருகை

டில்லி:

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷே டில்லி வருகிறார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘நான் தலைவராக உள்ள விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் டில்லியில் ஒரு பொது நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் கலந்து கொள்ள இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேக்கு அழைப்பு விடுத்தேன். எனது அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.